×

கள்வன் படத்துக்கு ஹங்கேரியில் பின்னணி இசை

சென்னை: ஜி.வி.பிரகாஷ்-பாரதிராஜா நடிக்கும் படம் ‘கள்வன்’. இந்த படத்தின் பின்னணி இசை ஹங்கேரியில் நடந்துள்ளது. இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், அறிமுக இயக்குநர் பி.வி.சங்கர் இயக்கும் ‘கள்வன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் இவானா ஹீரோயினாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பாரதிராஜா நடித்துள்ளார். ‘நக்கலைட்ஸ்’ ஜென்சன் திவாகர், பிரசன்னா பாலச்சந்திரன், நிவேதிதா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாடல்களுக்கான இசையை ஜி.வி.பிரகாஷ் அமைத்துள்ளார். பின்னணி இசையை ரேவா அமைக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இதன் பின்னணி இசையை ஹங்கேரியில் நடத்தியுள்ளனர். ஆக்சஸ் பிலிம் பேக்டரி ஜி.டில்லி பாபு இந்த படத்தை தயாரித்துள்ளார். இதுபற்றி ரேவா கூறும்போது, ‘இந்தப் படத்தின் பின்னணி இசை மிகவும் சவாலானது. உணர்வுகள் இந்தப் படத்தின் மையமாக இருப்பதால், அதற்கான இசையை கொடுத்துள்ளோம்’ என்றார். அடுத்த வருடம் படம் வெளியாக இருக்கிறது.

The post கள்வன் படத்துக்கு ஹங்கேரியில் பின்னணி இசை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Galvan ,Hungary ,Chennai ,GV Prakash ,Bharathiraja ,GV Prakash Kumar ,PV Shankar ,Ivana ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மேக்கப் இல்லாமல் நடித்த இவானா