×

நெகட்டிவிட்டி வேண்டாம்: லோகேஷ் கனகராஜ் அட்வைஸ்

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘லியோ’ படத்தை தொடர்ந்து ரஜினியின் 171வது படத்தை இயக்க கமிட்டாகியுள்ளார். அதற்கான கதை எழுதும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், அடுத்த ஆண்டு ஏப்ரலில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர். இதனிடையே ‘ஜி-ஸ்குவாட்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

உறியடி விஜய்குமார் நடித்த ‘ஃபைட் கிளப்’ படத்தை தன்னுடைய நிறுவனம் சார்பில் வெளியிட்டார். இந்த நிலையில் சமூக வலைத்தளங்களிலிருந்து சிறிது பிரேக் எடுக்கவுள்ளதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எனது பேனரான ஜி ஸ்குவாட்டின் கீழ் முதல் படமாக வழங்கிய ‘ஃபைட் கிளப்’-க்கு நீங்கள் அளித்த அன்பு மற்றும் ஆதரவுக்காக அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதற்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன். எனது அடுத்த படத்தின் கதை எழுதும் பணிகளில் ஈடுபட்டு வருவதால் சமூக வலைத்தளங்களுக்கு சிறிது பிரேக் எடுக்கவுள்ளேன். நான் அறிமுகமானதில் இருந்து நீங்கள் என் மீது பொழிந்த அன்பிற்கும் ஆதரவிற்கும் பார்வையாளர்களுக்கும் மீண்டும் நன்றி சொல்ல விரும்புகிறேன். அதுவரை அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். பாசிடிவ்வாக இருக்கவும் நெகட்டிவிட்டியை புறக்கணிக்கவும்’ என தெரிவித்துள்ளார்.

The post நெகட்டிவிட்டி வேண்டாம்: லோகேஷ் கனகராஜ் அட்வைஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Lokesh Kanakaraj ,Chennai ,Rajini ,Sun Pictures ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...