×

டிமான்டி காலனி 2 டிரெய்லர் வெளியானது

சென்னை: அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டிமான்டி காலனி 2’. இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இசையமைப்பாளர் சாம் சி.எஸ் பேசியதாவது: ஒரு கலைஞனின் படைப்பு தோற்கலாம் கலைஞன் தோற்பதில்லை. இந்தப்படத்தில் அஜய் மிரட்டியிருக்கிறார். ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்துள்ளார். இந்தப்படத்தில் வேலை பார்ப்பதற்காக வேறு பல படங்கள் நான் செய்யவில்லை, இப்படம் எங்களுக்கே பயத்தைத் தருகிறது, ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்.

இயக்குநர் அஜய் ஞானமுத்து பேசும்போது, ‘என் கோப்ரா படத்துக்கு சரியான விமர்சனங்கள் இல்லை. அந்த நேரத்தில் உடனே என்னைத் தேடி வந்தார் அருள்நிதி சார், தூக்கிப்போடு அடுத்த படம் பண்ணலாம் என்றார். இப்படி ஒரு தோள் கிடைக்க ஆசீர்வாதம் வேண்டும். இப்போது வரை உடன் நிற்கிறார் அவருக்கு என் நன்றிகள்’ என்றார். இப்படத்தில் அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஹரீஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை டி. குமரேஷ் கவனிக்க, கலை இயக்கத்தை ரவி பாண்டி மேற்கொண்டிருக்கிறார். ஒயிட் நைட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஞானமுத்து பட்டறை ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் விஜய் சுப்பிரமணியன், ராஜ்குமார் மற்றும் இயக்குநர் அஜய் ஞானமுத்து ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் சார்பில் பாபி பாலசந்திரன் இப்படத்தை வழங்குகிறார்.

The post டிமான்டி காலனி 2 டிரெய்லர் வெளியானது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,Ajay Gnanamuthu ,Arulnidhi ,Priya Bhavani Shankar ,Sam CS ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...