×

‘மிஸ்டர் சந்திரமௌலி’ நடிகர் ரா.சங்கரன் காலமானார்

சென்னை: கடந்த 1974ல் சிவகுமார் நடித்த ‘ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு’ என்ற படத்தில் இயக்குநராக அறிமுகமானவர், ரா.சங்கரன் என்கிற ராமரத்தினம் சங்கரன். தொடர்ந்து ‘தேன் சிந்துதே வானம்’, ‘துர்கா தேவி’, ‘ஒருவனுக்கு ஒருத்தி’, ‘பெருமைக்குரியவள்’, ‘தூண்டில் மீன்’, ‘வேலும் மயிலும் துணை’, ‘குமரிப்பெண்ணின் உள்ளத்திலே’ ஆகிய படங்களை இயக்கிய அவர், நடிப்பிலும் தீவிர கவனம் செலுத்தினார். ‘புதுமைப்பெண்’, ‘ஒரு கைதியின் டைரி’, ‘மெளன ராகம்’, ‘மக்கள் என் பக்கம்’, ‘அமராவதி’, ‘காதல் கோட்டை’, ‘அழகர்சாமி’ உள்பட ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தார்.

‘மெளன ராகம்’ படத்தில் ரேவதியின் தந்தை சந்திரமௌலி கேரக்டரில் நடித்த அவரை, ‘மிஸ்டர் சந்திரமௌலி’ என்று ஹீரோ கார்த்திக் அழைக்கும் காட்சி ரசிகர்களிடம் அவரை பிரபலமாக்கியது. 1999க்கு பிறகு நடிக்காத ரா.சங்கரன், உடல்நலக்குறைவு காரணமாக தனது 92வது வயதில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு இயக்குநர் பாரதிராஜா உள்பட திரையுலகினர் இரங்கல் தெரிவித்தனர்.

The post ‘மிஸ்டர் சந்திரமௌலி’ நடிகர் ரா.சங்கரன் காலமானார் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Ra.Sankaran ,Chennai ,Ramaratnam Sankaran ,Sivakumar ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...