×
Saravana Stores

மனிதனை மனிதன் சுமக்கும் பழக்கம் கைவிடப்பட வேண்டும்: முத்தரசன் அறிக்கை

சென்னை:  இந்திய கம்யூனிஸ்ட் மாநில  செயலாளர் முத்தரசன் அறிக்கை:சைவ மடமான தர்மபுரம் ஆதினத்தின் பட்டனப் பிரவேச நிகழ்வு அப்பகுதியில் பதற்றநிலையை உருவாக்கியுள்ளது. கால மாற்றத்தில் சமூக நாகரீக வளர்ச்சியில் பல்வேறு மாறுதல்கள் ஏற்பட்டிருப்பதை ஆதினம் கருத்தில் கொண்டு மனிதனை மனிதன் சுமக்கும் வழக்கத்தை கைவிட வேண்டும். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு நிர்வாகம் மனிதர்கள் மனிதனை தூக்கிச் செல்வதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவை தர்மபுர ஆதினம் மதித்து நடக்க வேண்டும்.ஆன்மிக நம்பிக்கை கொண்டோர் நடத்தும் ஒரு நிகழ்வை பாஜவும், அதன் தலைவர் அண்ணாமலையும் அரசியல் ஆதாயம் தேடி பயன்படுத்தும் மலிவான செயலை வன்மையாகக் கண்டிக்கிறது. …

The post மனிதனை மனிதன் சுமக்கும் பழக்கம் கைவிடப்பட வேண்டும்: முத்தரசன் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Mutharasan ,Chennai ,Communist ,State Secretary ,Dharmapuram Adinam ,Pattana ,
× RELATED திமுக கூட்டணியில் எந்த குழப்பமும்...