×

தயாரிப்பாளர் ஆனது ஏன்: சமந்தா

சென்னை: தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் திரைப்படங்களிலும், வெப்தொடர்களிலும் நடித்து வரும் சமந்தா, மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று உடல்நிலை தேறி வருகிறார். இதனால் அவர் தற்காலிகமாக நடிப்பில் இருந்து ஒதுங்கியிருக்கிறார். இந்நிலையில், படத்தயாரிப்பு நிறுவனம் ஒன்றை சமந்தா தொடங்கியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற எனது தயாரிப்பு நிறுவனத்தை பற்றி அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

புதிய சிந்தனைகள் அடங்கிய படைப்புகளை முன்னிலைப்படுத்துவதே இதன் நோக்கம். நமது சமூக கட்டமைப்பின் வலிமையானதும், சிக்கலானதுமான தன்மைகள் கொண்ட கதைகளை இந்த தளம் ஊக்குவிக்கும். பல்வேறு திறமைகள் கொண்ட படைப்பாளிகளின் உண்மையான, அர்த்தமுள்ள உலகளாவிய படைப்புகளை வெளிப்படுத்த இந்த தளம் பேருதவியாக இருக்கும்’ என்றார். சிறு வயதில் தான் கேட்டு ரசித்த ‘பிரவுன் கேர்ள் இன் தி ரிங் நவ்’ என்ற ஆங்கிலப் பாடலில் இருந்து ஈர்க்கப்பட்டு, ‘ட்ராலாலா’ என்ற பெயரை தேர்வு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

The post தயாரிப்பாளர் ஆனது ஏன்: சமந்தா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Samantha ,Chennai ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா