×

70 ஆண்டுக்குப் பின் இலங்கையில் 2000 யூனியன்களின் மாபெரும் ஸ்டிரைக் :ராஜபக்சேக்களுக்கு எதிராக மக்கள் கொந்தளிப்பு!!

கொழும்பு ; இலங்கையில் தொழிற்சங்க கூட்டமைப்புகள் அறிவித்து இருக்கும் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தை ஒட்டி பாதுகாப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. பெரும் பொருளாதார வீழ்ச்சியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. எரிபொருளுக்கும் உணவு மற்றும் மருந்து பொருட்களுக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமாக ராஜபக்சே குடும்பத்தினரை குற்றம் சாட்டி இருக்கும் மக்கள், அவர்கள் ஒட்டு மொத்தமாக பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இலங்கையில் உள்ள 2000க்கும் மேற்பட்ட முக்கிய தொழிற்சங்க பேரமைப்புகள் ஒன்றிணைந்து இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அதிபர், பிரதமர் பதவி விலகுமாறு வலியுறுத்தி இந்த முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. முழு அடைப்புடன் பல நகரங்களில் இலங்கை அரசுக்கு எதிராக போராட்டம், பேரணிகளை நடத்தவும் திட்டமிடப்பட்டு இருப்பதால் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் அமைதியான வழியில் போராட்டங்களை நடத்துமாறு காவல்துறை தெரிவித்துள்ளது. வணிக நிறுவனங்களை மூட நிர்பந்திக்கும் நபர்கள் மற்றும் வன்முறைகளால் ஈடுபடுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. …

The post 70 ஆண்டுக்குப் பின் இலங்கையில் 2000 யூனியன்களின் மாபெரும் ஸ்டிரைக் :ராஜபக்சேக்களுக்கு எதிராக மக்கள் கொந்தளிப்பு!! appeared first on Dinakaran.

Tags : 2000 unions ,Sri Lanka ,Rajapakses ,Colombo ,Dinakaran ,
× RELATED இலங்கைக்கு கடத்த முயன்ற 3,700 பீடி இலைகள் பறிமுதல்..!!