×

‘பூதம் கேரக்டர் சூப்பராக இருக்கும்’: வைபவ்வை கலாய்த்த ஆதி

 

சென்னை: கேஜேஆர் ஸ்டுடியோஸ் வழங்க, கவ்ஸ்டப் என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள படம், ‘ஆலம்பனா’. பாரி கே.விஜய் இயக்கியுள்ளார். வைபவ், பார்வதி நாயர், முனீஷ்காந்த், யோகி பாபு, காளி வெங்கட், ஆனந்தராஜ், ரோபோ சங்கர், திண்டுக்கல் ஐ.லியோனி, பாண்டியராஜன், முரளி சர்மா, கபீர் சிங் நடித்துள்ளனர். வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்ய, ஹிப்ஹாப் தமிழா ஆதி இசை அமைத்துள்ளார். பா.விஜய், கபிலன் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளனர். வரும் 15ம் தேதி திரைக்கு வரும் இப்படம் குறித்து பார்வதி நாயர் கூறுகையில், ‘என் பேவரைட் ஜானர் பேண்டஸி காமெடிதான். அந்த ஜானரில் ‘ஆலம்பனா’ உருவாகியுள்ளது. ஷூட்டிங்கில் வைபவ் எனக்கு நிறைய உதவிகள் செய்தார்’ என்றார்.

வைபவ் கூறும்போது, ‘இக்கதையை தயாரிப்பாளர் சொன்னபோது, ‘சூப்பராக இருக்கிறது. ஹீரோ யார்?’ என்று கேட்டபோது, ‘நீதான்’ என்றார் தயாரிப்பாளர். சந்தோஷமாக இருந்தது. ஜெய், பிரேம்ஜி போன்றோருடன் பல படங்களில் நடித்துவிட்டேன். இப்படத்தில் முனீஷ்காந்த், காளி வெங்கட் போன்ற சீனியர்களுடன் நடித்தது குறித்து சந்தோஷமாக இருக்கிறது. பூதம் கதை என்றவுடன், எனக்கு பூதம் கேரக்டர் சூப்பராக இருக்கும் என்று ஹிப்ஹாப் தமிழா ஆதி ஜாலியாக கலாய்த்தார். அவர் சிறப்பாக இசை அமைத்துள்ளார். முழுநீள காமெடி படமான இதை குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம்’ என்றார்.

The post ‘பூதம் கேரக்டர் சூப்பராக இருக்கும்’: வைபவ்வை கலாய்த்த ஆதி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Botham ,Aadi ,Vaibhav ,CHENNAI ,Gaustab Entertainment ,KJR Studios ,Barry K. Vijay ,Parvathy Nair ,Munishkanth ,Yogi Babu ,Kali Venkat ,Anandraj ,Robo Shankar ,Dindigul I. Leoni ,Pandiyarajan ,Murali Sharma ,Kabir… ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பண மோசடி வழக்கில் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா சகோதரர் கைது!