×

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன்

சென்னை, நவ.30: கடந்த ஆண்டு காளிதாஸ் ஜெயராம், தன்யா ரவிச்சந்திரன் நடிப்பில் ஜீ5 ஓடிடி தளத்திற்காக ‘பேப்பர் ராக்கெட்’ என்ற வெப் சீரிஸ் ஒன்றை இயக்கியிருந்தார் கிருத்திகா உதயநிதி. அதற்கு முன் ‘வணக்கம் சென்னை’, ‘காளி’ ஆகிய படங்களை அவர் இயக்கினார். இப்போது தான் இயக்கி வரும் படத்துக்கு ‘காதலிக்க நேரமில்லை’ என தலைப்பு வைத்துள்ளார். இந்த படத்தில் ஹீரோவாக ஜெயம் ரவி நடிக்கும் நிலையில் ஹீரோயினாக நித்யா மேனன் நடித்து வருகிறார். மென்மையான ரொமான்டிக் கதை கொண்ட படமாக இது உருவாகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

இதற்கு முன் ரெட் ஜெயன்ட் தயாரித்த ‘மாமன்னன்’ படத்துக்கும் ரஹ்மான் இசையமைத்திருந்தார். இரண்டாவது முறையாக இந்நிறுவனத்துடன் இணைந்து அவர் பணியாற்றுகிறார். ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் 40 நாட்களாக நடந்து முடிந்துள்ளது. இதில் யோகி பாபு, விநய், பானு, ஜான் கொக்கன், லால், லட்சுமி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, வினோதினி நடித்துள்ளனர். லாரன்ஸ் கிஷோர் எடிட்டிங் செய்கிறார். கேவ்மிக் அரி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

The post கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Jayam Ravi ,Nithya Menon ,Kirutika Udayanidhi Movement ,Chennai ,Kalidas Jayaram ,Tanya Ravichandran ,G5 OTD ,Kirithika Udayanidhi ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ரசிகர் மரணம்: வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!