×

மீண்டும் வெளியாகும் ‘முத்து’

கவிதாலயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்க, ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்து வெளியாகி வெற்றிபெற்ற படம், ‘முத்து’. கடந்த 1995 அக்டோபர் 23ம் தேதி ரிலீசான இதில் மீனா, சரத்பாபு, ராதாரவி, ரகுவரன், செந்தில், வடிவேலு நடித்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்தார். ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்த சில படங்கள் மீண்டும் ரிலீசாகியுள்ளன.

தற்போது அந்த வரிசையில் ‘முத்து’ படம் வரும் டிசம்பர் 2ம் தேதி ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும், 8ம் தேதி தமிழ்நாட்டிலும் வெளியாகிறது. பிலிமில் படமாக்கப்பட்டு இருந்த இப்படம் தற்போது அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாற்றப்பட்டு, வரும் டிசம்பர் 12ம் தேதி ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு திரைக்கு கொண்டு வரப்படுகிறது.

The post மீண்டும் வெளியாகும் ‘முத்து’ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Kavitalaya Productions ,KS Ravikumar ,Rajinikanth ,Meena ,Sarathbabu ,Radharavi ,Raghuvaran ,Senthil ,Vadivelu ,AR Rahman ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED நரேந்திர மோடி 3-வது முறை பிரதமராக பதவியேற்பது சாதனை: நடிகர் ரஜினிகாந்த்!