×

துருக்கியில் தளபதி 68 படப்பிடிப்பு

சென்னை: தளபதி 68 படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு துருக்கி செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தனது 68வது படத்தில் நடிக்கிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். அக்டோபர் 2ம் தேதி இதன் பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தாய்லாந்தில் வெங்கட்பிரபு பிறந்தநாளுக்கு முன்பாக முக்கியமான சண்டைக் காட்சி படமாக்கப்பட்டதாக தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து சென்னையில் சில காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு துருக்கி செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தின் பெயர் விரைவில் அறிவிக்கபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post துருக்கியில் தளபதி 68 படப்பிடிப்பு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Thalapathy 68 shooting ,Turkey ,Chennai ,Thalapathy 68 ,Vijay ,Venkat Prabhu ,AGS ,Yuvan Shankar Raja ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை ஏர்போர்ட்டுக்கு 6வது முறையாக...