×

‘டீப்ஃபேக்’ வீடியோ சாதாரணமாகி விட்டது: ராஷ்மிகா பேட்டி

ஐதராபாத்: ஆபாசமாக சித்தரித்து வெளியாகும் ‘டீப்ஃபேக்’ வீடியோவை சாதாரணமாக எடுத்துக் கொண்டோம் என்று நடிகை ராஷ்மிகா மந்தனா கூறினார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடந்த சினிமா நிகழ்வில் ராஷ்மிகா மந்தனா கலந்து கொண்டார். அப்போது அவரிடம் சமீபத்தில் வெளியான அவரது ‘டீப்ஃபேக்’ போலி ஆபாச வீடியோ குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், ‘டீப்ஃபேக் வீடியோக்கள் சமீபகாலமாக அதிகமாக வெளியாகி வருகிறது.

அதனால் ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதனை நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொண்டோம். இதுபோன்ற போலி வீடியோக்களை வெளியிடுவது சரியானது அல்ல. ‘டீப்ஃபேக் வீடியோக்களால், எந்தவொரு பெண்ணுக்கும் பாதிப்பு ஏற்பட்டாலும், அதுகுறித்து அவர்கள் பேச வேண்டும்’ என்றார். முன்னதாக ராஷ்மிகா மந்தனா மட்டுமின்றி, நடிகைகள் கேத்ரினா, கஜோல், அலியா பட் போன்ற நடிகைகளின் ‘டீப்ஃபேக்’ வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

The post ‘டீப்ஃபேக்’ வீடியோ சாதாரணமாகி விட்டது: ராஷ்மிகா பேட்டி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Rashmika ,Hyderabad ,Rashmika Mandana ,Rashmika Mandhana ,Hyderabad, Telangana ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED நடுவானில் விமானத்தில் இயந்திர கோளாறு;...