×

தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் லோகேஷ் கனகராஜ்

சென்னை: 2017ம் ஆண்டு வெளியான ‘மாநகரம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் லோகேஷ் கனகராஜ். முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்து முத்திரை பதித்தார். இதனைத் தொடர்ந்து இவர் இயக்கத்தில்கார்த்தி நடிப்பில் கைதி ரிலீசானது. இது கார்த்தியின் சினிமா கேரியரில் திருப்புமுனை படமாக அமைந்தது. பின்னர் விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். இப்படம் மூலம் ஹாட்ரிக் வெற்றியை லோகேஷ் கனகராஜ் பதிவு செய்தார்.

இதனைத் தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து இவர் இயக்கிய ‘விக்ரம்’ படம் மாபெரும் வசூல் வேட்டை ஆடியது. இப்படம் உலகம் முழுவதும் ரூ.400 கோடி வசூலித்தது. இதையடுத்து மீண்டும் விஜய்யுடன் இணைந்து ‘லியோ’ படத்தை இயக்கியிருந்தார். இப்போது ரஜினியின் 171வது படத்தை இயக்க உள்ள நிலையில், அதற்கான கதை எழுதும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதற்கு ‘ஜி-ஸ்குவாட்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் முதல் படம் உள்ளிட்ட அடுத்தடுத்த படங்கள் அவருடைய நெருங்கிய இயக்குனர் நண்பர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள் இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். தான் தயாரிக்கும் முதல் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளிவரும் என தெரிவித்துள்ளார்.

The post தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் லோகேஷ் கனகராஜ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Lokesh Kanagaraj ,Chennai ,Kaithi ,Karthi ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஐஸ்வர்யா லட்சுமியுடன் திருமணமா? அர்ஜூன் தாஸ்