×

கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே நடிக்கும் அக்கா

மும்பை: பாலிவுட்டிலுள்ள யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்ட்ரீமிங் தயாரிப்பு பிரிவான ஒய்ஆர்எப் என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் புதிய இந்தி தொடர், ‘அக்கா’.  கடுமையான முறையில் பழிவாங்கும் கதை கொண்ட இதில் கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே நடிக்கின்றனர். எழுத்தாளர் தர்மராஜ் ஷெட்டி இயக்குகிறார். இத்தொடரின் தொலைநோக்குப் பார்வை ஆதித்யா சோப்ராவின் கவனத்தை அதிகமாக ஈர்த்தது.

ஒய்ஆர்எப் என்டர்டெயின்மெண்ட்டின் முதல் தொடர், ‘தி ரயில்வே மேன்’. நெட்பிளிக்ஸில் வெளியான இதில் மாதவன், கே கே மேனன், திவ்யேந்து ஷர்மா, பாபில் கான் நடித்தனர். 1984 போபால் விஷவாயு சோக நிகழ்வில், வெளியே தெரியாத சிலருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தொடர் உருவானது. அடுத்த தொடர், ‘மண்டேலா மர்டர்ஸ்’. பல சீசன்கள் கொண்ட கிரைம் திரில்லர் தொடரான இதில் வாணி கபூர், வைபவ் ராஜ் குப்தா, சுர்வீன் சாவ்லா, ஜமீல் கான் நடித்து வருகின்றனர்.

The post கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே நடிக்கும் அக்கா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Keerthy Suresh ,Radhika Apte ,Akka ,MUMBAI ,YRF Entertainment ,Yashraj Films ,Bollywood ,Dharmaraj Shetty ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அஜித்துக்கு ஜோடியாகிறார் கீர்த்தி சுரேஷ்?