×

நடிகரின் மரணத்தில் மர்மம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள மீனடம் பகுதியை சேர்ந்தவர் வினோத் தாமஸ் (47), பிரபல நடிகர். பல மலையாளப் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தார். இந்தநிலையில் கடந்த 18ம் தேதி கோட்டயம் பாம்பாடி பகுதியில் உள்ள ஒரு மது பாருக்கு காரில் வந்தார். அப்போது வினோத் தாமஸ் காருக்குள் இறந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது. காரில் ஏசியை தொடர்ந்து இயக்கியதால் விஷப் புகை வெளியாகி அதை சுவாசித்து அவர் இறந்திருக்கலாம் என்று கருதப்பட்டது.

இதற்கிடையே பிரேத பரிசோதனையில் கார்பன் மோனாக்சைடு வாயுவை சுவாசித்தது தான் வினோத் தாமசின் மரணத்திற்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. காருக்குள் கார்பன் மோனாக்சைடு வாயு எப்படி வந்தது? என்பது தெரியவில்லை. இதையடுத்து போலீசார், மோட்டார் வாகனத் துறையினர் நடத்திய பரிசோதனையில் காரில் எந்த பழுதையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் மெக்கானிக்கல் இன்ஜினியர்களை வரவழைத்து காரில் கூடுதல் பரிசோதனைகள் நடத்த போலீசார் தீர்மானித்து உள்ளனர்.

The post நடிகரின் மரணத்தில் மர்மம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Thiruvananthapuram ,Vinod Thomas ,Meenadam ,Kottayam ,Kerala ,Bombadi ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED திருவனந்தபுரத்தில் 2 வயது குழந்தை கடத்தல்