×

திரிஷா பற்றிய ஆபாச பேச்சு: மன்சூர் அலிகானுக்கு சிரஞ்சீவி கண்டனம்

ஐதராபாத்: திரிஷா பற்றி ஆபாசமாக பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து சிரஞ்சீவி எக்ஸ் தளத்தில் நேற்று கூறியிருப்பதாவது: திரிஷா பற்றி நடிகர் மன்சூர் அலிகான் கூறிய சில கருத்துகள் என் கவனத்துக்கு வந்தது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த கருத்துகள் ஒரு கலைஞருக்கு மட்டுமல்ல, எந்த ஒரு பெண்ணுக்கும் அருவருப்பானதாகவும், மோசமானதாகவும் இருக்கிறது.

இந்த கருத்துகள் கடுமையான வார்த்தைகளில் கண்டிக்கப்பட வேண்டும். சிலர் வக்கிரத்தில் விழுந்து விடுகிறார்கள். மன்சூர் அலிகானும் அதில் ஒருவர். திரிஷாவுடன் நான் நிற்கிறேன். மேலும் இதுபோன்ற கொடூரமான கருத்துகளுக்கு உள்ளாக வேண்டிய ஒவ்வொரு பெண்ணும் திரிஷா போல் போராட வேண்டும். இவ்வாறு சிரஞ்சீவி கூறியுள்ளார்.

The post திரிஷா பற்றிய ஆபாச பேச்சு: மன்சூர் அலிகானுக்கு சிரஞ்சீவி கண்டனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Trisha ,Chiranjeevi ,Mansoor Ali Khan ,Hyderabad ,X site ,Kollywood Images ,
× RELATED அபராதம் விதித்த உத்தரவை மறுஆய்வு...