×

இந்தியாவின் 54 வது சர்வதேச திரைப்பட விழாவில் ‘கடக் சிங்’

கோவாவில் நடைபெறும் பெருமைமிக்க 54 வது சர்வதேச திரைப்பட விழா (ஐஎஃப்எஃப்ஐ) –யின் திறப்பு விழாவில் மிகவும் – எதிர்பார்க்கப்படும், பங்கஜ் த்ரிபாதி நடிக்கும் ‘கடக் சிங்கின்’ ட்ரெய்லரை வெளியிட்டது. இந்தியா முழுவதிலிருந்தும் வந்திருந்த அரசு அலுவலர்கள், பிரமுகர்கள், உச்ச நட்சத்திரங்கள் மற்றும் உலகெங்கிலும் இருந்து வந்திருந்த திரைப்பட வெறியர்கள் பங்கேற்ற மிகவும் மதிக்கப்படும் மற்றும் பெருமை மிக்க ஆசியாவின் திரைப்பட விழாக்களில் ஒன்றான இந்த நிகழ்வில், இந்த ட்ரெய்லர் ஆரவாரமான வரவேற்பை பெற்றது, இது திரைப்படத்தின் நம்பகத்தன்மையை மேலும் வலுப்படுத்தியது. மேலும் முக்கிய விஷயம் என்னவென்றால், கடக் சிங் ஐஎஃப் எஃப்ஐ, கோவாவில் –ல் ‘காலா ப்ரீமியர்கள்’ பிரிவில் அதன் உலகளவிலான வெளியீட்டை தொடங்க உள்ளது மற்றும் முக்கிய நபர்கள் பங்கு பெறும் இந்த நிகழ்வில், மிகுந்த ஆர்வம் மற்றும் எதிர்பார்ப்பிற்கு இடையே அனைத்து நடிகர்கள் மற்றும் திரைப்பட குழுவினர் பங்கேற்க உள்ளனர். இந்த திரைப்படம் 8 டிசெம்பர் 2023 அன்று வெளியிடப்படவிருக்கிறது.

தேசிய விருது- வென்ற இயக்குனர் அனிருத்தா ராய் சௌதிரி இயக்கிய கடக் சிங் திரைப்படத்தில் தேசிய விருது-வென்ற பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர், பங்கஜ் த்ரிபாதி, பார்வதி திருவோது மற்றும் முன்னணி கதாபத்திரத்தில் சஞ்சனா சாங்கியுடன் பங்களாதேஷி நடிகர், ஜெயா அஹ்சான் மற்றும் முக்கிய துணை பாத்திரங்களில் பரேஷ் பாஹூஜா மற்றும் வருண் புத்ததேவ் ஆகியோர் நடிக்கின்றனர். ஓபஸ் கம்யூனிகேஷனுடன் இணைந்து ஒரு விஸ் ஃபிலிம்ஸ் மற்றும் கேவிஎன் தயாரிப்பு, கடக் சிங். விஸ் ஃபிலிம்ஸ் (ஆன்ட்ரே டிமின்ஸ், வீராஃப் சர்க்காரி மற்றும் சப்பாஸ் ஜோசஃப்), ஹெச்டீ கன்டென்ட் ஸ்டூடியோ (மகேஷ் ராமநாதன்) மற்றும் கேவிஎன்- ஆல் தயாரிக்கப்படுகிறது மற்றும் இணைத் தயாரிப்பாளர்கள் ஷ்யாம் சுந்தர் மற்றும் இந்திராணி முக்கர்ஜி.

இந்த திரைப்படம், கடக் சிங் என்றழைக்கப்பட்ட ஏகே ஷ்ரிவாஸ்தவின் வாழ்க்கையை பின்தொடர்கிறது , இவர் நிதி சார்ந்த குற்றங்கள் துறையில் கூட்டு இயக்குனராக உள்ளார், தற்போது பிற்போக்கு மறதி நோயுடன் போராடிக்கு கொண்டிருக்கிறார். ஏகே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதுடன் திரைப்படம் தொடங்குகிறது மற்றும் அவருடைய கடந்த காலம் பற்றிய முரண்பாடான கதைகள் அவருக்கு சொல்லப்படுகிறது, கதையிலிருந்து உண்மையை பிரித்து சொல்ல அவர் வற்புறுத்தப்படுகிறார் . பாதி – மறந்த நினைவுகளுக்கு இடையே, மர்மமான முறையில் ஒரு மருத்துவமணியில் சேர்ந்திருப்பதன் பின்னால் மற்றும் குறிப்பிடத்தக்க ஒரு நிதி சார்ந்த குற்றத்தின் பின்னால் உள்ள உண்மையைக் கண்டறிய அவர் மன உறுதியுடன் உள்ளார், இவை அனைத்தும் அவருடைய குடும்பம் பிரிவதிலிருந்து பாதுகாக்கும் போது நடைபெறுகிறது. இது ஒழுங்காக செயல்படாத ஒரு குடும்பம் மற்றும் உணர்வுகளின் ஏற்றத் தாழ்வுகளுக்கு வழிவகுக்கும் எதிர்பாராத தொடர் நிகழ்வுகளின் காரணமாக அவர்கள் ஒன்றிணையும் கதையும் கூட. இந்த திரைப்படம் வெவ்வேறு வடிவங்களில் உறவுகளின் முக்கியத்துத்தை மற்றும் இந்த உறவுகள் எப்படி வெவ்வேறு கண்ணோட்டங்களை அளிக்கிறது என்பதைக் காட்டுகிறது, இது கதை முன்னோக்கி நகர உதவுகிறது.

நடிகர் பங்கஜ் த்ரிபாதி கூறுகையில், “கடக் சிங் நான் முன்னதாக நடித்திருக்கும் வேறு எந்த கதையும் போல அல்லாதது. அவர் வழக்கத்திற்கு மாறான கதாபாத்திரம் மற்றும் அடுக்குகளை கொண்ட இத்தகைய ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. கூடுதலாக, டோனி டா, பார்வதி, ஜெயா மற்றும் இளமையான மற்றும் ஆர்வம் நிறைந்த சஞ்சனா போன்றவர்கள் உட்பட சில நம்பமுடியாத திறமை சாலிகளுடன் வேலை செய்ய முடிந்தது. அனைவரின் ஒன்றிணைந்த சக்தி மற்றும் பேரார்வம் உண்மையிலேயே இந்த திரைப்படத்தை பக்கங்களிலிருந்து ஸ்க்ரீனுக்கு மாற்றியது. மேலும், கடந்த இரவு ஐஎஃப்எஃப்ஐ –ல் ட்ரெய்லரை அறிமுகப்படுத்தியது மற்றும் முதன் முறையாக ட்ரெய்லருக்கான மக்களின் எதிர்வினையை பார்ப்பது மிகுந்த ஆர்வமளித்தது. இங்கே ஐஎஃப்எஃப்ஐ –ல் இந்த திரைப்படத்தையும் திரையிடுகிறோம், அதனால் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெறும் என்று ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்”.

The post இந்தியாவின் 54 வது சர்வதேச திரைப்பட விழாவில் ‘கடக் சிங்’ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : 54th International Film Festival of India ,Pankaj Tripathi ,54th International Film Festival ,IFFI ,Goa ,India ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தஞ்சை பெரிய கோயிலில் ஹாலிவுட் நடிகர் தரிசனம் பிரதமர் மோடி கருத்து