×

கமல்ஹாசனின் ஆளவந்தான் ரீ-ரிலீஸ்

 

சென்னை: கமல்ஹாசன் நடித்திருக்கும் ‘ஆளவந்தான்’ படம், வரும் டிசம்பர் மாதம் 8ம் தேதியன்று 1,000 திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்து, கடந்த 2001 நவம்பர் மாதத்தில் திரைக்கு வந்த படம், ‘ஆளவந்தான்’. சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்தார். மற்றும் ரவீணா டாண்டன், மனீஷா கொய்ரலா, சரத்பாபு, அனுஹாசன், பாத்திமா பாபு, ரியாஸ்கான் நடித்தனர். சங்கர், எஹ்சான், லாய் இணைந்து இசை அமைத்தனர். ஹீரோவாகவும், வில்லனாகவும் இரு வித்தியாசமான வேடங்களில் கமல்ஹாசன் நடித்தார்.

உளவியல் சிக்கல் குறித்து பேசிய இப்படம் வெளியாகி 22 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், வரும் டிசம்பர் 8ம் தேதி இப்படத்தை 1,000 தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளார். இதனால், கமல்ஹாசனுடைய ரசிகர்கள் அதிக உற்சாகம் அடைந்துள்ளனர்.

The post கமல்ஹாசனின் ஆளவந்தான் ரீ-ரிலீஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Kamal Haasan ,Chennai ,Suresh Krishna.… ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள்...