×

ஆம்புலன்ஸ் டிரைவர் வேடத்தில் ஜெயம் ரவி

சென்னை: ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரிக்க, ஜெயம் ரவி ஆம்புலன்ஸ் டிரைவர் வேடத்தில் நடித்துள்ள படம், ‘சைரன்’. இந்த கேரக்டருக்காக ஜெயம் ரவி சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிற்கு மாறியுள்ளார். இப்படம் குறித்த அறிவிப்பில், சைரனுடன் செல்லும் ஒரு ஆம்புலன்ஸின் போட்டோ டைட்டிலுடன் வெளியானது. பிறகு வயதான கைதியாக ஜெயம் ரவியின் தோற்றம் வெளியானது. தற்போது வெளியான டீசரில், சிறையில் இருக்கும் ஜெயம் ரவி பரோலில் வெளியே வரும் காட்சி இடம்பெற்றுள்ளது. கைதி ஜெயம் ரவி குறித்த ஒரு கதையும், போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி சுரேஷ் பற்றிய மற்றொரு கதையும் சொல்லப்பட்டுள்ளது.

விஷால் நடித்த ‘இரும்புத்திரை’, அஜித் குமார் நடித்த ‘விஸ்வாசம்’, சிவகார்த்திகேயன் நடித்த ‘ஹீரோ’ ஆகிய படங்களுக்கு வசனம் எழுதிய ஆண்டனி பாக்யராஜ், ‘சைரன்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் சமுத்திரக்கனி நடிக்கிறார். எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு கீர்த்தி சுரேஷ் ேஜாடியாக நடிக்கவில்லை. ஜெயம் ரவி ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.

The post ஆம்புலன்ஸ் டிரைவர் வேடத்தில் ஜெயம் ரவி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Jayam Ravi ,Chennai ,Sujatha Vijayakumar ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ரசிகர் மரணம்: வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!