×

வெப்தொடரில் நடித்தது ரொம்ப கஷ்டமாக இருந்தது: ஆர்யா

சென்னை: அமேசான் பிரைம் வீடியோ வழங்க, ஸ்டுடியோ சக்தி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.எஸ்.ராதாகிருஷ்ணன் தயாரித்துள்ள தமிழ் ஹாரர் திரில்லர் வெப்தொடர், ‘தி வில்லேஜ்’. நயன்தாரா நடித்த ‘நெற்றிக்கண்’ படத்தை இயக்கிய மிலிந்த் ராவ், இந்த வெப்தொடரை இயக்கியுள்ளார். ஆர்யா, திவ்யா பிள்ளை, பூஜா ராமச்சந்திரன், ஜெயப்பிரகாஷ், அர்ஜூன் சிதம்பரம், ஜான் கொக்கன், ஆடுகளம் நரேன், ஜார்ஜ் மரியான், தலைவாசல் விஜய், அஸ்வின் குமார், கலைராணி, கோகுல், பேபி ஆழியா, பி.என்.சன்னி, முத்துக்குமார் நடித்துள்ளனர். மிலிந்த் ராவ், தீரஜ் வைத்தி, தீப்தி கோவிந்தராஜன் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையில் சியான் சாஹீர், செந்தில் குமார், ஜக்கி பெர்ரி, சினேகன், குரு அய்யாதுரை, ஷில்பா நடராஜன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

அஸ்வின் வத்சங்கம், விவேக் ரங்காச்சாரி, ஷாமிக் தாஸ் குப்தா ஆகியோர் எழுதிய கிராபிக்ஸ் ஹாரர் நாவலைத்தழுவி ‘தி வில்லேஜ்’ வெப்தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. இது வரும் 24ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. இதன் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய ஆர்யா, ‘எந்தக் காட்சியையும் மிலிந்த் ராவ் அவ்வளவு சுலபமாக ஓ.கே செய்துவிட மாட்டார். பிராஸ்தடிக் மேக்கப், ஷூட்டிங் நடந்த லொகேஷன் எல்லாமே மிகவும் கடினமாக இருந்தது. 3 வருடங்களாக கடுமையாக உழைத்து வெப்சீரிஸை உருவாக்கியுள்ளோம். இதில் காட்சிகளுக்கு ஏற்ப என்னை மாற்றிக்கொண்டு நடித்தது ரொம்ப கஷ்டமாகவும், புதிய அனுபவமாகவும் இருந்தது. காணாமல் போன என் குழந்தையையும், மனைவியையும் ஆடுகளம் நரேனுடன் சேர்ந்து நான் தேடி அலைவதுதான் கதை’ என்றார். பிரைம் வீடியோ இந்தியா அன்ட் தென்கிழக்கு ஆசியாவின் தலைவர் அபர்ணா புரோஹித் மற்றும் வெப்தொடர் குழுவினர் பங்கேற்றனர்.

The post வெப்தொடரில் நடித்தது ரொம்ப கஷ்டமாக இருந்தது: ஆர்யா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Arya ,Chennai ,PS Radhakrishnan ,Studio Sakthi Productions ,Amazon ,Milind Rao ,Nayanthara ,Divya Pillai ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...