×

எனக்கும் மேஜிக் நடக்குமா? கேட்கிறார் அரிஷ் குமார்

சென்னை: கஸ்தூரிராஜா இயக்கிய ‘இது காதல் வரும் பருவம்’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர், அரிஷ் குமார். இவர், மறைந்த படத்தொகுப்பாளர் கணேஷ் குமாரின் மகன். தொடர்ந்து 18 வருடங்களாக நடித்து வரும் அரிஷ் குமாருக்கு ‘மாத்தி யோசி’, ‘கோரிப்பாளையம்’, ‘முத்துக்கு முத்தாக’, ‘மிக மிக அவசரம்’ போன்ற படங்கள் சிறப்பாக அமைந்தன.

இந்நிலையில், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஜெய், தான்யா ஹோப், மாஸ்டர் மகேந்திரன் ஆகியோருடன் ‘லேபில்’ என்ற வெப்தொடரில் போலீஸ் கேரக்டரில் நடித்துள்ள அரிஷ் குமார் கூறியதாவது: தற்போது ‘கண்ணதாசன்’ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறேன். இதிலும் நான் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறேன். சுகன் குமார் இயக்குகிறார். ஒரு நடிகருக்கு போலீஸ் படம் அவரை அடுத்தகட்டத்தை நோக்கி நகர்த்திச் செல்லும். எனது திரைப்பயணத்திலும் அந்த மேஜிக் நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

The post எனக்கும் மேஜிக் நடக்குமா? கேட்கிறார் அரிஷ் குமார் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Arish Kumar ,CHENNAI ,Ganesh Kumar ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சிலையாவூரணி கிராமத்தில் கால்நடைகள் மருத்துவ முகாம்