×

சமூக வலைத்தளத்தில் காரசாரம்: அல்லு அர்ஜுன், யஷ் ரசிகர்கள் மோதல்

ஐதராபாத்: பிரபல தெலுங்கு தயாரிப்பாளரும், அல்லு அர்ஜுனின் தந்தையுமான அல்லு அரவிந்த், திரைப்படங்களின் அதிக பட்ஜெட்டுக்கு நட்சத்திரங்கள் மட்டும் காரணம் அல்ல என்று கூறினார். இது பற்றி அல்லு அரவிந்த் கூறும்போது, ‘ஒரு திரைப்படத்தின் முன்னணி நடிகருக்கு அந்த படத்தின் பட்ஜெட்டில் 20 முதல் 25 சதவீதம் மட்டுமே சம்பளமாக கிடைக்கிறது. ஆக, இவரின் கட்டணத்தால் மட்டும் படத்தின் பட்ஜெட் அதிகரிக்கும் என்பது உண்மையல்ல.

நடிகர்களின் கட்டணத்துக்கு மேல், திரைப்படத்தை ஒரு பெரிய முயற்சியாக உருவாக்க நிறைய பணம் செலவிடப்படுகிறது. ‘கேஜிஎஃப்’க்கு முன் யஷ் யார்? அவர் அவ்வளவு பெரிய ஹீரோவா? படம் ஏன் வசூல் வேட்டையாடியது? படத்தின் மேக்கிங் மற்றும் பிரமாண்டத்தால் மட்டுமே படத்தை உயர்த்த முடிந்தது. இது ஒரு உதாரணம் மட்டுமே’’’ என்றார். அல்லு அரவிந்தின் இந்த பேட்டியால் யஷ் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

யஷ் எப்போதுமே பிரபலம்தான். ‘கேஜிஎஃப்’ படத்தில் அவர் இல்லையென்றால் அந்த படமே கிடையாது என ஒருவர் கூறியிருக்கிறார். மற்றொரு ரசிகர், ‘அல வைகுந்தபுரமுலு’ படத்துக்கு முன் அல்லு அர்ஜுன் யார்? அவரும் வளரும் நடிகர்தான். ‘புஷ்பா’ படத்துக்கு பிறகே அவர் பான் இந்தியா ஸ்டார் ஆனார். அதுபோல்தான் எங்கள் யஷ்ஷும் எனக் கூற, பதிலுக்கு அல்லு அர்ஜுன் ரசிகர்கள், யஷ்ஷை பற்றி விமர்சிக்க சமூக வலைத்தளத்தில் காரசார விவாதம் நடந்து வருகிறது.

The post சமூக வலைத்தளத்தில் காரசாரம்: அல்லு அர்ஜுன், யஷ் ரசிகர்கள் மோதல் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Allu Arjun ,Yash ,Hyderabad ,Allu Arvind ,Kollywood Images ,
× RELATED செக் மோசடி வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கைது..!!