×

எலான் மஸ்க் வாழ்க்கை திரைப்படம் ஆகிறது

லாஸ் ஏஞ்சல்ஸ்: டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க்கின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. உலகிலேயே மிகவும் பிரபலமானவர்களின் வாழ்க்கை சம்பவங்களை மையமாக வைத்து பயோபிக் படங்கள் உருவாக்கப்படுகின்றன. குறிப்பாக, அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து பல படங்கள் உருவாக்கப்படுகின்றன. அந்த வகையில் உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓவுமான எலான் மஸ்க்கின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக்கப்படுகிறது.

இதை ‘பிளாக் ஸ்வான்’, ‘பை’ போன்ற படங்களை இயக்கிய ஹாலிவுட் இயக்குனர் டேரன் அரோனோஃப்ஸ்கி இயக்குகிறார். ஏ24 நிறுவனம் தயாரிக்கிறது. அமெரிக்காவை சேர்ந்த எழுத்தாளர் வால்டர் ஐசக்சன் என்பவர், எலான் மஸ்க்கின் வாழ்க்கை வரலாற்றை ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டிருந்தார். ஏழை குடும்பத்தில் பிறந்து பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்ட எலான் மஸ்க், பிறகு எப்படி வாழ்க்கையில் வெற்றி பெற்றார் என்ற சம்பவங்கள் அதில் இடம்பெற்றிருந்தது. அந்த புத்தகத்தை அடிப்படையாக வைத்து எலான் மஸ்க் வாழ்க்கை வரலாறு பற்றிய திரைப்படம் உருவாக்கப்படும் என்று தெரிகிறது.

The post எலான் மஸ்க் வாழ்க்கை திரைப்படம் ஆகிறது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Elon Musk ,Los Angeles ,Tesla ,CEO ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பிரபல எலக்ட்ரிக் கார் நிறுவனமான...