×

நடிகை பபிதா மகள் ஹீரோயின் ஆனார்

சென்னை: சீனியர் நடிகர் ஜஸ்டின் மகள் பபிதா, 1980களில் கவர்ச்சி வேடங்களில் நடித்தார். ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். தற்போது அவரது இளைய மகள் ஹரிஷ்மிதா ஹீரோயினாக அறிமுகமாகிறார். ‘அழியாத கோலங்கள்’ 2ம் பாகத்தை இயக்கியிருந்த எம்.ஆர்.பாரதி தற்போது இயக்கியுள்ள ‘ட்ரீம் கேர்ள்’ என்ற படத்தில் அவர் நடித்துள்ளார். ஹரிஷ்மிதா ஜோடியாக புதுமுகம் ஜீவா நடித்துள்ளார். என்.சாலமன் போவாஸ் ஒளிப்பதிவு செய்ய, இளமாறன் இசை அமைத்துள்ளார். எம்.ஆர்.பாரதி கூறுகையில், ‘காதலுக்கு சாதி, மதம், இனம், மொழி, நாடு எதிரியாக இருக்கும் இப்படத்தில், கனவுதான் காதலின் எதிரியாக இருக்கிறது. காதலர்களுக்கு அவர்கள் தூங்கும்போது காணும் கனவே பெரும் பிரச்னையாகிறது. அதுபோன்ற புதுமையான திரைக்கதையுடன், 4 கேரக்டர்களை மையப்படுத்தி கதை நடக்கும். புதுமுகங்களை ஆடிஷன் மூலம் தேர்வு செய்தேன். ஹரிஷ்மிதா தேர்வான பிறகுதான், அவர் பபிதாவின் மகள் என்ற விஷயம் தெரிந்தது. கதைக்கேற்ற அழகும், திறமையும் இருந்ததால் அவரை நடிக்க வைத்தேன். சினிமாவில் அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. முழு படப்பிடிப்பும் ஊட்டியில் நடந்துள்ளது’ என்றார்.

The post நடிகை பபிதா மகள் ஹீரோயின் ஆனார் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Babita ,CHENNAI ,Justin ,Harishmita ,MR Bharti ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தங்கல் படத்தில் ஆமிர்கான் மகளாக நடித்த நடிகை சுஹானி திடீர் மரணம்