×

ராஷ்மிகாவின் போலி ஆபாச வீடியோ பீகார் வாலிபர் சிக்கினார்

புதுடெல்லி: நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக 19 வயது பீகார் வாலிபரிடம் கிடுக்கிப்பிடியாக டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து டெல்லி காவல் துறை மூத்த அதிகாரி கூறியதாவது: இந்த வீடியோவை அந்த வாலிபர், தனது சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து பின்னர் மற்ற தளங்களில் பகிர்ந்துள்ளார். அவரது கணக்கில் இருந்து பதிவேற்றப்பட்டதால் விசாரணை நடத்துவதற்காக அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகள் 465 (போலி செய்ததற்கான தண்டனை) மற்றும் 469 (நற்பெயரை கெடுக்கும் நோக்கத்திற்காக மோசடி செய்தல்) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவுகள் 66சி மற்றும் 66இ ஆகியவற்றின் கீழ் உளவு துறை இணைவு மற்றும் வியூக நடவடிக்கைகளின் கீழ் கடந்த 10ம் தேதி டெல்லி காவல் துறையின் சிறப்பு பிரிவு எப்ஐஆர் பதிவு செய்தது. இருப்பினும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இன்ஸ்டாகிராமில் இருந்து வீடியோவை பதிவிறக்கம் செய்ததாக கூறினாலும் பீகாரை சேர்ந்த அந்த வாலிபரிடம் விசாரித்து வருகிறோம். அந்த வாலிபர், காவல் துறையின் சிறப்பு பிரிவு முன் ஆஜரானார். அவர் பதிவேற்ற பயன்படுத்தியதாக கூறப்படும் அவரது கைப்பேசியை கொண்டு வரும்படி கேட்டு கொள்ளப்பட்டார் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

The post ராஷ்மிகாவின் போலி ஆபாச வீடியோ பீகார் வாலிபர் சிக்கினார் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Bihar ,Rashmika ,New Delhi ,Delhi Police ,Rashmika Mandhana ,Delhi Police Department ,Kollywood Images ,
× RELATED நடுவானில் விமானத்தில் இயந்திர கோளாறு;...