×

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தீ விபத்து: டீன் தேரணிராஜன் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு

சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனை டீன் தேரணிராஜன் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு பதியப்பட்டுள்ளது. சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் டவர்-1, டவர்-2 கட்டிடங்களுக்கு பின்புறம் 105 வயதுடைய பழமையான கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் முதல் மற்றும் 2வது தளத்தில் நரம்பியல் துறையும், 3வது தளத்தில் இதயவியல் துறையும் உள்ளது. நேற்று காலை 10.21 மணிக்கு தரைத்தளத்தில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக மொத்தமுள்ள 99 நோயாளிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த மருத்துவமனையில் நோய், விபத்து என உடல்நலக்குறைக்கு உள்ளான நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்கான வருகின்றனர். மருத்துவமனையில் உள்நோயாளி, புறநோயாளிகள் பிரிவுகளும் உள்ளன. பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு பிரிவுகளும் இங்கு உள்ளது. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்தால் அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு சிலிண்டர் வெடித்தது. இந்நிலையில் இந்த தீ விபத்து காரணமாக மருத்துவமனை டீன் அளித்த புகாரின் பேரில் வழங்கப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது….

The post சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தீ விபத்து: டீன் தேரணிராஜன் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Rajiv ,Gandhi ,Government ,Hospital fire accident in ,Chennai ,Teen Teeranrajan ,Rajiv Gandhi Government Hospital ,Hospital ,Teen ,in ,Teenirrajan ,
× RELATED ஷர்மிளா தற்கொலை விவகாரம்:...