×

கட்டில் இசை வெளியீடு

 

சென்னை: மேப்பிள் லீப்ஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் இ.வி.கணேஷ் பாபு தயாரித்து இயக்கி ஹீரோவாக நடித்துள்ள படம், ‘கட்டில்’. சிருஷ்டி டாங்கே, மீரா ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். பி.லெனின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி எடிட்டிங் செய்துள்ளார். வைட் ஆங்கிள் ரவிசங்கர் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார். வைரமுத்து, மதன் கார்க்கி பாடல்கள் எழுதியுள்ளனர். இப்படம் குறித்து வைரமுத்து பேசியதாவது: ‘கட்டில்’ போன்ற சிறுபடங்கள் ஓடினால்தான் தமிழ் சினிமாவுக்கு நல்லது. அப்போதுதான் புதிய கலைஞர்கள் நமக்கு கிடைப்பார்கள். துப்பாக்கிச் சத்தங்களுக்கு மத்தியில் கணேஷ் பாபு புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருக்கிறார். சிறுபடங்கள்தான் நம்மை சிறகடித்துப் பறக்க வைக்கும், நம் சிந்தனையை வளர்க்கும்.

பழைய படங்களின் போஸ்டர்களைப் பார்த்தால், அதில் எல்லாம் பெண்களும் முக்கியமாக இடம்பெற்று இருப்பார்கள். இப்போது சினிமா போஸ்டர்களில் பெண்களின் படங்களைப் பார்க்க முடிகிறதா? பெண்ணுக்கு சரிசமமான இடம் தந்த சினிமாதான் தமிழ் சினிமாவின் பொற்காலம். அந்தப் பொற்காலத்தை தனது ‘கட்டில்’ மூலம் மீட்டுக்கொண்டு வந்திருக்கிறார் கணேஷ் பாபு’ என்றார்.

The post கட்டில் இசை வெளியீடு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : EV Ganesh Babu ,Maple Leaps Productions ,Srishti Dange ,Meera Raj ,P.Len ,Kattil ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சிருஷ்டி டாங்கே ஃபிட்னெஸ் ட்ரிக்ஸ்!