×

பிசியாகும் சஞ்சனா நடராஜன்

சமீபத்தில் ‘வெளியான ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தில் மலைவாழ் ஆதிவாசி பெண்ணாகவும், எஸ்.ஜே.சூர்யாவை திருமணம் செய்து கொள்ளும் பெண்ணாகவும் நடித்தவர் சஞ்சனா நடராஜன். அவரது நடிப்பை பார்த்துவிட்டு யார் இவர் என எல்லோரும் ஆச்சர்யப்படுகிறார்கள். இவர் இயக்குனர் பா ரஞ்சித்தின் ‘சர்பட்டா பரம்பரை’ படத்தில் கலையரசன் ஜோடியாக நடித்தவர். அந்த படத்தில் அவரது நடிப்பு பேசப்பட்டது. அதில் அவர் வடசென்னை பெண்ணாக நடித்தார், இதில் அவர் ஆதிவாசி பெண்ணாக நடித்துள்ளார்.

இதனால் யாருக்கும் அவரை அடையாளம் தெரியவில்லை. தற்போது சஞ்சனா பிசியான குணசித்ர நடிகை ஆகிவிட்டார். தமிழில் ‘பாட்டில் ராதா’, பிஜாய் நம்பியாரின் ‘போர்’ மற்றும் மலையாளப் படமான ‘டிக்கி டக்கா’ படங்களில் நடித்து வருகிறார். “இப்போதெல்லாம் கதைதான் நாயகன், நாயகி எல்லாம். அந்த கதையில் நாம் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறோமோ அதற்கு உண்மையாக இருக்க வேண்டும். உழைக்க வேண்டும். அது சிறிய கேரக்டரா, பெரிய கேரக்டரா என்பதெல்லாம் அப்புறம்தான். அப்படித்தான் எனது கேரக்டர்களை தேர்வு செய்கிறேன்” என்கிறார் சஞ்சனா.

 

The post பிசியாகும் சஞ்சனா நடராஜன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Sanjana Natarajan ,SJ Surya ,Pa Ranjith ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மருத்துவ மாணவியாக மாறிய சஞ்சனா