×

லேடி தாதாவாக பிரியாமணி

திருமணத்திற்கு பிறகு சினிமா, வெப் தொடர் என பிசியாகி விட்டார் பிரியாமணி. அதுவும் ஸ்பை, போலீஸ் அதிகாரி என விதவிதமான வேடங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது தமிழில் ‘கொட்டேஷன் கேங்’ என்ற படத்தில் லேடி தாதாவாக நடித்திருக்கிறார். இந்த படத்தை பிலிமிநதி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் காயத்ரி சுரேசுடன் இணைந்து விவேக் குமார் கண்ணன் தயாரித்து, இயக்கி உள்ளார். அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்துள்ளார், டிரம்ஸ் சிவமணி இசை அமைத்துள்ளார்.

படம் பற்றி இயக்குனர் விவேக் குமார் கண்ணன் கூறும்போது “இது ஒரு லேடி கேங்ஸ்டாின் கதை. சகுந்தலா நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண். சில சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக கேங்ஸ்டராகிறார். தனக்கென ஒரு அடியாள் கூட்டத்தை ஏற்படுத்திக் கொள்கிறார். கேங்ஸ்டர்களின் ரோல் மாடலான சஞ்சய் தத் தனக்கு வரும் அசைன்மெண்டுகளை ஏலம் விடுவார்.

யார் குறைந்த பணத்துக்கு அந்த அசைன்மெண்டை செய்ய முன் வருகிறார்களோ அவர்களுக்கு அந்த வேலையை கொடுப்பார். இது மாதிரி கொட்டேஷன் ெகாடுத்து அசைன்மெண்ட் செய்த ெகாட்டேஷன் கேங் ஒன்று கேரளாவில் இருந்தது. அதனால் இந்த படத்திற்கு அதையே பெயராக வைத்தோம். பிரியாமணி சகுந்தலாவாக நடித்துள்ளார். சன்னி லியோனும் கேங்ஸ்டராக நடித்துள்ளார். சகுந்தலாவை சுற்றி கதை நடந்தாலும் இது ஒரு ஹெபர் லிங் கதை. என்றார்.

 

The post லேடி தாதாவாக பிரியாமணி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Priyamani ,Lady Grandpa ,Lady Dada ,Lady Priyamani ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஏர்போர்ட், ஜிம், ஓட்டல்களில்...