×

பேஸ்புக்கில் அவதூறு: மம்தா கோபம்

சென்னை: பேஸ்புக்கில் அவதூறு பரப்பிய பெண் மீது மம்தா மோகன்தாஸ் கோபம் அடைந்தார். நடிகர், நடிகைகள் பற்றி சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நடிகை மம்தா மோகன்தாஸ் பற்றி, ‘மம்தா மோகன்தாஸின் அவல வாழ்க்கை’ என்ற தலைப்பில் கீத்து நாயர் என்ற பெண் பேஸ்புக்கில் ஒரு பதிவு எழுதியிருந்தார். பொய்யாக எழுதப்பட்ட அந்த கட்டுரையை வாசித்த மம்தா மோகன்தாஸ் அதிர்ச்சி அடைந்தார்.

நேரடியாக அந்த பக்கத்தின் கமென்ட் பகுதியில், ‘யார் நீங்கள்? என்ன சொல்கிறீர்கள்? உங்கள் பக்கத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக என்ன வேண்டுமானாலும் எழுதுவீர்களா?’ என்ற அவர், தொடர்ந்து, ‘தயவு செய்து இதுபோன்ற மோசடியான நபர்களின் பக்கத்தைப் பின் தொடராதீர்கள்’ என்று தெரிவித்துள்ளார். மம்தாவுக்கு ஆதரவாக பலர் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து அந்த பெண்ணின் பேஸ்புக் பக்கம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

The post பேஸ்புக்கில் அவதூறு: மம்தா கோபம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Facebook ,Mamata ,Chennai ,Mamata Mohandas ,Mamta Mohandas ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஜன் தன் யோஜனா திட்டத்தை பயன்படுத்தி...