×

பிரம்மாண்டமாக நடக்கும் கேப்டன் மில்லர் இசை வெளியீட்டு விழா

நடிகர் தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீணா ரவி நடிப்பில் திரைக்கு வந்த ‘ராக்கி’, செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஓடிடியில் வெளியான ‘சாணிக் காயிதம்’ ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன், தற்போது இயக்கியுள்ள பான் இந்தியா படம், ‘கேப்டன் மில்லர்’. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

வரலாற்றுச் சம்பவங்களுடன் உருவாகியுள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். முக்கிய வேடங்களில் சந்தீப் கிஷன், பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் நடித்துள்ளனர். சிறப்பு வேடம் ஒன்றில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் நடித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் போன்றவை சமூக வலைத்தளங்களில் வெளியாகி தனுஷ் ரசிகர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தது. வரும் டிசம்பர் 15ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படம் வெளியாக இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், இதன் புரோமோஷன் பணிகளை மேற்கொள்ள தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன் பகுதியாக, கேப்டன் மில்லரின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

The post பிரம்மாண்டமாக நடக்கும் கேப்டன் மில்லர் இசை வெளியீட்டு விழா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Grand Captain Miller music ,Dhanush ,Vasant Ravi ,Bharathiraja ,Raveena Ravi ,Selvaraghavan ,Keerthy Suresh ,Kollywood Images ,
× RELATED அரவக்குறிச்சி ராமர்பாண்டி கொலை வழக்கு: 5 பேருக்கு நீதிமன்ற காவல்