×

அமீர் இயக்காத காரணம்

அமீர் நடித்து தயாரித்துள்ள படம், ‘மாயவலை’. இதை அவர் இயக்கவில்லை. இதுபற்றி அவர் கூறுகையில், ‘இப்படம் தொடங்கியதன் நோக்கம், இயக்குனர் ரமேஷ் பாலகிருஷ்ணன் மட்டுமே. முரளி நடித்த ‘அதர்மம்’ என்ற அற்புதமான படத்தை இயக்கிய அவர், பிறகு பல முன்னணி நடிகர்களை வைத்து சில படங்கள் இயக்கினார். எனக்கும், அவருக்கும் நல்ல நட்பு நீடித்து வருகிறது.

அவரிடம் நான் உதவி இயக்குனராகப் பணியாற்ற ஆசைப்பட்டேன். ஆனால், திடீரென்று அவரது திரைப்பயணம் திசை மாறிவிட்டது. டி.வி துறை பக்கம் ஒதுங்கிவிட்டார் என்றாலும், திரைப்படம் இயக்க வேண்டும் என்பது அவரது பெருவிருப்பமாக இருந்தது. எனவே, அவரிடம் கதை சொல்லும்படி கேட்டேன். பிறகு அக்கதையை பல ஹீரோக்களிடம் சொன்னோம். ஊகூம், ஒருவரும் நடிக்க முன்வரவில்லை. பிறகு நானே நடிக்க வேண்டியதாகி விட்டது. இப்படித்தான் நாங்கள் ‘மாயவலை’யை பின்ன ஆரம்பித்தோம்.

படப்பிடிப்பு ஆரம்பித்த நிலையில் இருந்த பட்ஜெட் இப்போது பல மடங்கு எகிறிவிட்டது. உடனே இயக்குனர் வெற்றிமாறனிடம் சொன்னேன். நானே ரிலீஸ் செய்கிறேன் என்று சொன்னார். இன்றைய சினிமா வியாபாரம் தெரிந்த வெற்றிமாறன் போன்ற படைப்பாளி எங்கள் படத்தை ரிலீஸ் செய்வது, எங்கள் படக்குழுவினருக்கு மிகவும் பெருமையான விஷயம்’ என்றார்.

The post அமீர் இயக்காத காரணம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Aamir ,Ramesh Balakrishnan ,Murali ,Kollywood Images ,
× RELATED என் மீதான குற்றச்சாட்டுக்கும்...