×

பிரபுதேவா படத்தில் மடோனா

ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா, மடோனா செபாஸ்டியன், யோகி பாபு நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. ‘சார்லி சாப்ளின்’ படத்தை தொடர்ந்து பிரபுதேவா, ஷக்தி சிதம்பரம் மீண்டும் இணைந்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி, கொடைக்கானல் போன்ற தென்மாவட்டங்களிலும், சண்டைக்காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகள் சென்னையிலும் படமாகியுள்ளது. ‘சார்லி சாப்ளின்’ படம் இந்தியில் தேவி, போனிகபூர் தயாரிப்பில் ‘நோ என்ட்ரி’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

பிறகு அல்லு அரவிந்த் தயாரிப்பில் ‘பெல்லம் ஊர் எல்தே’ என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. பிறகு ஜெயராம், பாவனா நடிப்பில் ‘ஹேப்பி ஹஸ்பெண்ட்ஸ்’ என்ற பெயரில் மலையாளத்தில் ரீமேக் செய்யப்பட்டது. ரமேஷ் அரவிந்த் நடிப்பில் ‘அல்லா புல்லா சுல்லா’ என்ற பெயரில் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டது. மற்றும் பெங்காலி, குஜராத்தி, போஜ்புரி போன்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது.

புதிய படத்தில் யாஷிகா ஆனந்த், அபிராமி, ரெடின் கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ஜான் விஜய், ’ஆடுகளம்’ நரேன், மதுசூதன ராவ், ரோபோ சங்கர், சாய் தீனா, எம்.எஸ்.பாஸ்கர், ‘டாக்டர்’ சிவா, ‘கல்லூரி’ வினோத், கோதண்டம், ஆதித்யா கதிர், ஆதவன், ரகுபாபு, புஜிதா பொன்னடா, மரியா, அபி பார்கவன் நடித்துள்ளனர். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்ய, அஸ்வின் விநாயகமூர்த்தி இசை அமைத்துள்ளார். மு.ஜெகன் கவிராஜ் பாடல்கள் எழுதியுள்ளார். இப்படத்தின் டைட்டிலை மக்களே சூட்டுவார்கள் என்று படக்குழு ெதரிவித்துள்ளது.

The post பிரபுதேவா படத்தில் மடோனா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Madonna ,Prabhu Deva ,Shakti Chidambaram ,Madonna Sebastian ,Yogi Babu ,Charlie Chaplin ,Tenkasi ,Kodaikanal ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மீண்டும் தமிழுக்கு வந்த சன்னி லியோன்