×

காதலித்து திருமணம் செய்த நிலையில் பிரபல ராப் பாடகர் விவாகரத்து: டெல்லி குடும்ப நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: காதலியை திருமணம் செய்து கொண்ட ராப் பாடகர் ஜோடிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அவர்களுக்கு டெல்லி குடும்ப நீதிமன்றம் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளது. பிரபல ராப் பாடகர் ஹனி சிங்கும், அவரது காதலி ஷாலினி தல்வாரும் கடந்த 2011ம் ஆண்டு டெல்லியில் உள்ள குருத்வாராவில் சீக்கியர்களின் முறைப்படி ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். ஆனால் சில மாதங்களிலேயே ஹனி சிங்குக்கும், ஷாலினி தல்வாருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது.

அதையடுத்து இருவரும் ஒருவர் ஒருவர் புகார்களை கூறி வந்தனர். தொடர்ந்து விவாகரத்து கோரி டெல்லி குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது ஹனி சிங்குக்கும், ஷாலினி தல்வாருக்கும் விவாகரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர்களின் விவாகரத்துக்கு ஒப்புதல் அளிப்பதற்கு முன்பு, மனைவி ஷாலினி தல்வாருடன் சேர்ந்து வாழ விரும்புகிறீர்களா? என்று கடைசியாக நீதிமன்றம் கேட்டது.

இதற்கு பதிலளித்த ஹனி சிங், ‘இருவரும் ஒன்றாக வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை. அதனால் இருவரும் சேர்ந்து வாழ்வது சாத்தியமில்லை’ என்றார். அதேபோல் ஷாலினியிடமும் கடைசி வாய்ப்பு கேட்கப்பட்டது. அவரும் ஹனியுடன் சேர்ந்து வாழ முடியாது என்று கூறிவிட்டார். அதனால் இருவருக்கும் விவாகரத்து வழங்கி, இருவரும் தனித்தனியாக வாழ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து ஹனியும், ஷாலினியும் ஒருவர் மீது ஒருவர் கூறிய குற்றச்சாட்டுகளை வாபஸ் பெற்றனர்.

The post காதலித்து திருமணம் செய்த நிலையில் பிரபல ராப் பாடகர் விவாகரத்து: டெல்லி குடும்ப நீதிமன்றம் உத்தரவு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Delhi ,Honey Singh ,Shalini Talwar ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED டெல்லி விமான நிலையத்தில் மின்...