×

விஜயவாடாவில் இந்தியன் 2 அடுத்தக்கட்ட படப்பிடிப்பு

இந்தியன் 2 படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விஜயவாடாவில் விரைவில் துவங்க உள்ளது. கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள படம் ‘இந்தியன் 2’. இதில் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, குல்ஷன் குரோவர் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரெட் ஜெயன்ட் மூவிஸ், லைக்கா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. படத்தின் இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

எனவே, படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு திரைக்கு கொண்டு வர படக் குழுவினர் திட்டமிட்டு உள்ளனர். இந்த படத்தின் இன்ட்ரோவை வெளிப்படுத்தும் விதமான டீசர் அண்மையில் வெளியிடப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விஜயவாடாவில் விரைவில் துவங்க உள்ளது. இதில், நடிகர் கமல்ஹாசனுக்கான காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

The post விஜயவாடாவில் இந்தியன் 2 அடுத்தக்கட்ட படப்பிடிப்பு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vijayawada ,Shankar ,Kamal Haasan ,Kajal Aggarwal ,Rahul Preet Singh ,Priya Bhavani Shankar ,Siddharth ,Bobby Simha ,SJ Surya ,Gulshan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ‘பொய் வாக்குறுதிகளை அள்ளிவீசுகிறார்...