×

விழுப்புரத்தில் நூல் வெளியீட்டு விழா ஆளுநர் பதவி தேவையில்லாதது: ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பேச்சு

விழுப்புரம்: ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு எழுதிய நானும் நீதிபதி ஆனேன் என்ற நூல் வெளியீட்டு விழா விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரியில் நடந்தது. விழாவில் நீதிபதி சந்துரு பேசுகையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடி அனுப்பப்பட்ட சட்டமசோதா குறித்து, ஆளுநர் 3 மாதமாகியும் முடிவெடுக்காமல் உள்ளார். இப்படியிருக்கும்போது, நாட்டிற்கு ஆளுநர் பதவி தேவையா? அப்போது தமிழக அரசுக்கு என்னதான் அதிகாரம் இருக்கிறது. இவர்கள் சட்டத்தை மீறி, தங்கள் கொள்கைகளையும், தாங்கள் நினைப்பதையும் செயல்படுத்த பாசிச போக்குடன் செயல்படுகின்றனர். சட்டக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், பேராசிரியர்கள் நீதிமன்ற தீர்ப்புகளையும், நீதிபதிகளையும் விமர்சிக்க வேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் காக்கப்படும் என்றார்….

The post விழுப்புரத்தில் நூல் வெளியீட்டு விழா ஆளுநர் பதவி தேவையில்லாதது: ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பேச்சு appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Justice ,Chanduru ,High Court ,Villupuram Government ,
× RELATED மனிதக்கழிவு கலக்கப்பட்டதாக கூறப்பட்ட...