×

ஹாலிவுட் தூதர் சமந்தா

தனக்கு இருந்த மயோசிடிஸ் என்ற நோய்க்கான சிகிச்சை முடிந்து, அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு திரும்பியுள்ளார் சமந்தா. முன்பிருந்த மாதிரியே சுறுசுறுப்பாகப் பணியாற்றி வரும் அவர், வரும் 10ம் தேதி வெளியாகும் ஹாலிவுட் படமான ‘தி மார்வெல்ஸ்’ என்ற படத்தின் விளம்பர தூதராக மாறி, படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

அந்த நிகழ்ச்சியில், ‘தி மார்வெல்ஸ்’ படத்தில் இடம்பெறும் சூப்பர் ஹீரோக்களாக இந்திய நடிகர்களில் யார், யார் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த சமந்தா, ‘விஜய், அல்லு அர்ஜூன், பிரியங்கா சோப்ரா, அலியா பட் ஆகியோர் மிகவும் பொருத்தமாக இருப்பார்கள்’ என்று குறிப்பிட்டார். அவரது பதில் இணையதளங்களில் வைரலானது.

The post ஹாலிவுட் தூதர் சமந்தா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Hollywood ,Samantha ,India ,America ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED திடீர் மாரடைப்பு காரணமாக ஹாலிவுட் காமெடி நடிகர் மரணம்