×

பிரபுதேவா ஜோடியானார் மடோனா

சென்னை: டிரான்ஸ் இந்தியா மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் பிரபு தேவா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இந்த படத்தில் பிரபு தேவா ஜோடியாக மடோனா செபஸ்டியன் நடித்துள்ளார். மேலும் யாஷிகா ஆனந்த், அபிராமி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, ஒய்ஜி. மகேந்திரன், ஜான் விஜய், ‘ஆடுகளம்’ நரேன், மதுசூதனராவ், ‘ரோபோ’ சங்கர், சாய் தீனா, எம்.எஸ்.பாஸ்கர் என பலர் நடித்துள்ளனர். ஏற்கனவே நாகேஷ் திரையரங்கம் என்ற படத்தையும், மராட்டியில் ஒரு படத்தையும் டிரான்ஸ் இந்தியா மீடியா தயாரித்துள்ளது.

தற்போது சிறு இடைவெளிக்குப் பிறகு தமிழில் படம் தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி, கொடைக்கானல், உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும், சண்டைக் காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகள் சென்னையிலும் படமாக்கப்பட்டது. அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்துள்ளார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார். கலை இயக்குநராக ஜனார்த்தனன் பணியாற்றியுள்ளார். ‘அசுரன்’, ‘விடுதலை’ படங்களின் எடிட்டர் ராமர் எடிட்டிங் செய்கிறார். ஷக்தி சிதம்பரம் இயக்கியுள்ளார்.

The post பிரபுதேவா ஜோடியானார் மடோனா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Prabhu Deva ,Madonna ,Chennai ,Trans India Media Entertainment ,Madonna Sebastian ,Yashika Anand ,Abhirami ,Yogi Babu ,Redin Kingsley ,YG.… ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED வெங்கட் பிரபு இயக்கும் ‘கோட்’...