×

கடலூர் அரசு மருத்துவ கல்லூரியில் இந்த ஆண்டு சேர்ந்த மாணவர்களிடம் கல்வி கட்டணமாக ரூ.13,610 மட்டுமே வசூலிக்கப்படுகிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று கன்னியாகுமரி தளவாய் சுந்தரம் (அதிமுக), செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்ட்), ஜி.கே.மணி (பாமக) ஆகியோர், கடலூர் அரசு மருத்துவ கல்லூரியில் கல்வி கட்டணத்தை குறைப்பது குறித்து அரசின் கவனத்தை ஈர்த்து பேசினார்கள். அதற்கு பதில் அளித்து, மருத்துவம் – மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி, ராணி மெய்யம்மை செவிலியர் கல்லூரி, ராஜா முத்தையா பல் மருத்துவ கல்லூரி ஆகியவை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. சுயநிதி கல்லூரிகளாக இவை இருந்தபோது, கட்டண நிர்ணய குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்த உடன்பட்டு சேர்ந்த மாணவர்கள் சிலர், அரசு கட்டணத்தை வசூலிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அப்போது, அண்ணாமலை பல்கலைக்கழகம் மாணவர்களிடம் வசூலித்த கட்டணத்தையே தொடர்ந்து வசூலிக்கலாம் என்று தீர்ப்பு பெறப்பட்டது. இருந்தாலும், மாணவர்களின் எதிர்காலம் கருதி திமுக அரசு பொறுப்பேற்றபிறகு, இதர சுயநிதி கல்லூரி கட்டணத்துடன் ஒப்பிட்டு குறைக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, கல்வி கட்டணமானது ரூ.5 லட்சத்து 44 ஆயிரத்து 370ல் இருந்து ரூ.4 லட்சமாக குறைக்கப்பட்டது. இதில், 1,583 மாணவர்கள் பயன்பெற்றனர். இதனால், அரசுக்கு ரூ.119 கோடி இழப்பு ஏற்பட்டது. இந்த ஆண்டு 150 மாணவர் சேர்க்கை இடங்களில் 149 பேர் சேர்ந்துள்ளனர். அவர்களிடம் அரசு கல்வி கட்டணமாக ரூ.13,610 வசூலிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே படித்து வரும் மாணவர்களுக்கு அரசு கட்டணத்திற்கு இணையாக குறைப்பதற்கு வழி இல்லை. அதேநேரம், கடலூர் அரசு மருத்துவ கல்லூரியாக அரசாணை வெளியிட்ட பிறகு சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் அரசு நிர்ணயித்த கட்டணமே வசூலிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். …

The post கடலூர் அரசு மருத்துவ கல்லூரியில் இந்த ஆண்டு சேர்ந்த மாணவர்களிடம் கல்வி கட்டணமாக ரூ.13,610 மட்டுமே வசூலிக்கப்படுகிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Government Medical College of Cuddalore ,Minister ,Ma. Subramanian ,Chennai ,Kanyakumari Nyakumari ,Nayvai Chandaram ,Achikhaka ,Valvaperunthagi ,Congress ,Marimuthu ,Communist of India ,G.P. K.K. Mani ,Bamaka ,Cuddalore Government Medical College ,Dinakaran ,
× RELATED மஞ்சள் காய்ச்சலுக்காக தனியார்...