×

விஸ்வா மறைவுக்கு முத்தரசன் இரங்கல்

சென்னை: டேபிள் டென்னிஸ் இளம்வீரர் விஸ்வா தீனதயாளன் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தி: தேசிய அளவில் நடைபெறும் டேபிள் டென்னிஸ் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக அசாம் தலைநகர் கவுகாத்தியிலிருந்து மேகாலயா சென்ற போது கார் விபத்தில் பலியான இளம்வீரர் விஸ்வா தீனதயாளன் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் மிகச் சிறந்த நுட்பங்களை கையாண்டதாக அவரின் பயிற்சியாளர்கள் கூறுகிறார்கள். நுட்பங்களும் திறனும் மிகுந்த இளம் விளையாட்டு வீரர் நாட்டிற்காக இன்னும் பல சாதனைகள் புரிய வேண்டிய தருணத்தில் அவரது மரணம் வேதனையளிக்கிறது. இளம் விளையாட்டு வீரர் தீனதயாளன் குடும்பத்தாருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்….

The post விஸ்வா மறைவுக்கு முத்தரசன் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Mutharasan ,viswa ,Chennai ,Secretary of State of ,India ,Viswa Dienathyalan ,Dinakaran ,
× RELATED நாடு மதித்து போற்றும் தலைவர்களை...