×

வண்டலூர் அருகே தண்ணீர் குடிக்க வந்த போது தவறி கிணற்றில் விழுந்து தத்தளித்த புள்ளிமான் மீட்பு

கூடுவாஞ்சேரி: வண்டலூர் அருகே தண்ணீர் குடிக்க வந்தபோது விவசாய கிணற்றுக்குள்  தவறிவிழுந்த புள்ளிமானை அப்பகுதி மக்கள் மீட்டு வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். சென்னை அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ளது. வண்டலூர் பூங்காவில் தொடங்கி ஆலப்பாக்கம், சதானந்தபுரம், நெடுங்குன்றம், கொளப்பாக்கம், ஊனமாஞ்சேரி, ரத்தினமங்கலம், நல்லம்பாக்கம், கீரப்பாக்கம், அருங்கால், பெருமட்டுநல்லூர், குமிழி, கல்வாய், காரணைப்புதுச்சேரி வரை தொடர்ச்சியாக வன காப்பு காடுகள் உள்ளன.  இந்த காப்பு காட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மான்கள் உள்ளன. இவை கோடை காலங்களில் தண்ணீர் தேடி ஏரி, குளம், குட்டை, கிணறு மற்றும் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது வழக்கம்.அந்தவகையில் நேற்று காலை 9 மணி அளவில் தண்ணீருக்காக வண்டலூர் அருகேயுள்ள கொளப்பாக்கம் விகாஸ் அவென்யூ பகுதியில் தனியாருக்கு சொந்தமான விவசாய கிணற்றுக்கு புள்ளிமான் ஒன்று வந்துள்ளது.  பின்னர், தண்ணீர் குடிக்க முயன்றபோது தவறி கிணற்றுக்குள் விழுந்த புள்ளிமான் தவித்துகொண்டிருந்தது. கிணற்றுக்குள் புள்ளிமான் தவிப்பதை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.  இதுகுறித்து நெடுங்குன்றம் ஊராட்சி மன்ற தலைவர் வனிதா சீனிவாசனுக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.  அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன்  விவசாய கிணற்றுக்குள் தவித்த புள்ளி மானை மீட்டு வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்….

The post வண்டலூர் அருகே தண்ணீர் குடிக்க வந்த போது தவறி கிணற்றில் விழுந்து தத்தளித்த புள்ளிமான் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Tharuthi ,Vandalur ,Kooduvancheri ,Wandalur ,Dinakaran ,
× RELATED வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஊழியரை கடித்து குதறிய முதலை