×

பொறியியல் படிப்புக்கு 1.73 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்: தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் தகவல்

சென்னை: தமிழகத்தில் பொறியியல் சேர்க்கை கலந்தாய்வுக்காக 1.73 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான விண்ணப்பப் பதிவு மே 6ம் தேதி தொடங்கியது. முதல் நாளிலேயே 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். தொடர்ந்து மாணவர்கள் ஆர்வத்துடன் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.

தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இதுவரை ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 792 மாணவர்கள் நேற்று மாலை 6 மணி வரை பதிவு செய்துள்ளனர். இதில் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 366 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர். 81 ஆயிரத்து 950 மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு 2 லட்சத்து 28 ஆயிரத்து 122 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், இந்தாண்டு இந்த எண்ணிக்கை அதைவிட உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post பொறியியல் படிப்புக்கு 1.73 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்: தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Directorate of Technical Education ,Chennai ,Tamil Nadu ,Anna University ,
× RELATED பொறியியல் படிப்புக்கு 2.11 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்