×

இலங்கை புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு: 18 பேர் அமைச்சர் பதவியை ஏற்க உள்ளதாக தகவல்

கொழும்பு: கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் இன்று புதிய அமைச்சரவை பதவி ஏற்க உள்ளது. புதிய அமைச்சரவை இன்று காலை 10.30 மணியளவில் பதவி பிரமாணம் செய்து கொள்வதாக அரசாங்கம் தகவல் தெரிவித்தது. இந்த அமைச்சரவையில் சுமார் 18 பேர் மட்டுமே அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளனர். அரசாங்கத்திற்கு எதிராக மக்களின் போராட்டம் தீவிரமாக உள்ளதையடுத்து, பிரதமர் மகிந்திர ராஜபக்சேவை தவிர்த்து, ஏனைய 26 அமைச்சர்கள் கடந்த 3-ம் தேதி இரவு கூட்டாக அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து விலகினர். எனினும் மறுநாள், நாடாளுமன்ற மற்றும் அரசசேவைகளை முன்நடத்தி செல்வதற்காக நிதியமைச்சர் உள்பட 4 அமைச்சர் பதவிகளுக்கு புதிய அமைச்சர்களை நியமித்து அதிபர் பதவிகளை வழங்கினார். இந்தநிலையில் கடந்த சில தினங்களாக முன்னாள் அமைச்சர்களுக்கும் அதே பிரச்சனைகளை தொடர்ச்சியாக சந்தித்து வந்தனர். இதன்போது புதிய அமைச்சரவை குறித்து ஆலோசனைபட்ட நிலையில், தனக்கு எவ்வித ஆட்சி பொறுப்புகளை வழங்கவேண்டாம் என ஆளுங்கட்சியின் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். பொதுமக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில், பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அறிமுகம் இல்லாத சில முகங்கள் புதிய அமைச்சர் பதவிகளை பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தாலும், அவர்களின் கோரிக்கை என்பது அமைச்சர் ராஜபக்சே குடும்பங்கள் பதவி விளக்க வேண்டும் என்பதே. எனினும் இந்த போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருப்பினும் சிலர் சுயநலமாகவும், சிலர் அமைச்சர் பதவிகளை வேண்டாம் என கூறி அதிபருக்கு வலியுறுத்தினர். இதன்காரணமாக இன்றையதினம் புது இளம்நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவிகளை வழங்க உள்ளதாக அரசாங்கம் தகவல் தெரிவித்தது. இருப்பினும் தொடர்ந்து மக்களின் போராட்டம் மற்றும் கோரிக்கையானது அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்திர ராஜபக்சே ஆகியோர் அரசாங்கத்தை விட்டு வெளியே வேண்டும் என்பதே ஆகும். மேலும், இந்த புதிய அமைச்சரவையை பதவிப்பிரமாணம் செய்தாலும், இதனை மக்கள் ஏற்றுக்கொள்ள வாய்ப்பு குறைவாகவே உள்ளது. ஏனெனில், ராஜபக்சே குடும்பத்தினர் அரசியலை விட்டு வெளியேற வேண்டும் என்பதே மக்களின் ஒரே கோரிக்கையாக உள்ளது. இந்த நிலையில் புதிய அமைச்சரவைகளை மக்கள் ஏற்கமாட்டார்கள்; தொடர் போராட்டத்தில் ஈடுபடுவர்கள் என்று சமூக ஆய்வாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.   …

The post இலங்கை புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு: 18 பேர் அமைச்சர் பதவியை ஏற்க உள்ளதாக தகவல் appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Colombo ,PTI ,New Cabinet ,Dinakaran ,
× RELATED போதிய பயணிகள் இல்லாததால் இலங்கைக்கு ஒரே நாளில் 4 விமானங்கள் ரத்து