×

மீண்டும் ரூ.100 கோடி கிளப்பில் பாலகிருஷ்ணா

ஐதராபாத்: பாலகிருஷ்ணா நடித்த ‘பகவந்த கேசரி’ திரைப்படம் வெளியான 6 நாட்களில் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளது. பாலகிருஷ்ணாவின் 108வது படமாக உருவாகியுள்ள ‘பகவந்த் கேசரி’ படத்தை அனில் ரவிபுடி இயக்கியுள்ளார். சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்ட்டில் ஷைன்ஸ் ஸ்கீரின் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. தமன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். காஜல் அகர்வால், ஸ்ரீலீலா, சரத்குமார் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய்யின் அக்டோபர் 19-ம் தேதி வெளியான இப்படம் முதல் நாள் உலக அளவில் ரூ.32 கோடியை வசூலித்ததாக படக்குழு அறிவித்தது. இந்த நிலையில் ஆறு நாட்களில் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலித்துள்ளது. இந்தியாவில் இப்படம் ரூ.70 கோடியை நெருங்கியுள்ளது. பாலகிருஷ்ணா நடிப்பில் கடைசியாக வெளியான அகண்டா, வீர சிம்ஹா ரெட்டி ஆகிய படங்களும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதித்தது குறிப்பிடத்தக்கது.

The post மீண்டும் ரூ.100 கோடி கிளப்பில் பாலகிருஷ்ணா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Balakrishna ,Hyderabad ,Anil Ravipudi ,Shines Skier ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED 37 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த கரகாட்டக்காரன் ஜோடி