×

சிரஞ்சீவியுடன் இணைகிறார் ராணா

ஐதராபாத்: மல்லிடி வசிஷ்டா இயக்கத்தில் சிரஞ்சீவி தனது 156வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். ஆர்ஆர்ஆர் படத்துக்காக ஆஸ்கர் வென்ற எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். தற்போது இதன் ப்ரீ புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. பேண்டஸி ஜானரில் உருவாகும் இப்படத்திற்காக பிரமாண்டமான அரங்குகள் அமைந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க ராணா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுவரை நடிக்காத தோற்றத்தில் ராணாவை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்திருக்கிறது. இதனால் அவரது தோற்றத்துக்காக மேக்அப்பில் அதிக கவனம் செலுத்த உள்ளனர்.

The post சிரஞ்சீவியுடன் இணைகிறார் ராணா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Rana ,Chiranjeevi ,Hyderabad ,Mallidi Vashishtha ,U.V. ,Creations ,MM ,Keeravani ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்த சிரஞ்சீவி, திரிஷா