×

ரெபல் பர்ஸ்ட் லுக் வெளியானது

சென்னை: ஜி.வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ரெபல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் சிலம்பரசன் தனது இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ். இயக்கத்தில் தயாராகும் திரைப்படம் ‘ரெபல்’. இதில் ஜி.வி. பிரகாஷ் குமார், மமிதா பைஜூ, கருணாஸ், சுப்பிரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி., ஆதித்யா பாஸ்கர், கல்லூரி வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை வெற்றி கிருஷ்ணன் கையாள, கலை இயக்கத்தை உதயா கவனிக்கிறார். ஆக்சனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் சண்டை காட்சிகளை சக்தி சரவணன் அமைத்திருக்கிறார். உண்மை சம்பவங்களை தழுவி அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார்.

 

The post ரெபல் பர்ஸ்ட் லுக் வெளியானது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,G.V. ,Prakash Kumar ,Silambarasan ,Nikesh R.S. ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஒருவரது தனிப்பட்ட வாழ்விற்குள்...