சென்னை: திருவல்லிக்கேணி ரோட்டரி நகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் முகமது மீரான் (30). இவர், தனது தந்தை காஜா ெமாய்தீனுடன் சேர்ந்து, வீட்டின் முதல் மாடியில் வணிக பயன்பாட்டிற்காக காஸ் சிலிண்டர்களை விற்பனை செய்து வந்துள்ளார். நேற்று மதியம் வீட்டில் ஏசி இயங்கிக் கொண்டிருந்தபோது, ஒரு சிலிண்டரில் இருந்து மற்றொரு சிலிண்டருக்கு காஸ் நிரப்பியுள்ளனர். அப்போது, திடீரென தீவிபத்து ஏற்பட்டு, முதல் தளம் முழுவதும் பரவியுள்ளது.இவர்களின் அலறல் சத்தம் கேட்டு வீட்டின் அருகே வசித்து வரும் முகமது மீரான் சகோதரர் இஸ்மாயில் (35), அவரது மனைவி பாத்திமா (32), முகமது மீரான் மனைவி அஸ்மத் (26), முகமது மீரானிடம் வேலை செய்யும் மினி வேன் ஓட்டுனர் தினேஷ் (30) ஆகியோர் தீப்பிடித்த முதல் தளத்திற்கு ஓடி சென்று காஜா மொய்தீனை (70) மீட்டு வந்தனர். ஆனால் அதிகளவில் தீப்பிடித்து இருந்ததால் முகமது மீரானை அவர்களால் மீட்க முடியவில்லை. புகாரின்படி மயிலாப்பூர், தேனாம்ேபட்டை பகுதிகளில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கடுமையாக போராடி தீயை அணைத்தனர். மேலும், காஜா மொய்தீனை மீட்கும் போது தீக்காயமடைந்த பாத்திமா, அஸ்மத், ஓட்டுனர் தினேஷ் ஆகியோரை 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தீவிபத்தில் சிக்கிய முகமது மீரானை உடல் முழுவதும் கருகிய நிலையில் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராயப்பேட்டை உதவி கமிஷனர் லட்சுமணன் மற்றும் ராயப்பேட்டை போலீசார் விரைந்து வந்து தீ விபத்து குறித்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், காஸ் சிலிண்டரில் இருந்து கசிந்த எரிவாயு ஏசியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இருந்தாலும், தீ விபத்து குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் திருவல்லிக்கேணி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது….
The post திருவல்லிக்கேணியில் வீட்டில் பயங்கர தீ விபத்து சிலிண்டரில் காஸ் நிரப்பியபோது தீப்பிடித்து வாலிபர் உடல் கருகி பலி: 4 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை appeared first on Dinakaran.