×

இதயம் மகிழ்ச்சியில் துடிக்குது: அமிதாப்புடன் நடிப்பது பற்றி ரஜினி

சென்னை: தனது 170வது படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இப்படத்தில் அமிதாப்பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதனால் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் திருவனந்தபுரத்தில் தொடங்கி திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. இது தொடர்பான வீடியோக்கள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியுள்ளது. இதற்காக நேற்று மும்பை சென்றார் ரஜினி. மும்பையில் நடக்கும் படப்பிடிப்பில் அமிதாப்பச்சனும் கலந்துகொள்வதாக கூறப்படும் நிலையில், ரஜினி, அமிதாப்பச்சனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அவரது எக்ஸ் தள பக்கத்தில் இதை பகிர்ந்த அவர், ‘33 ஆண்டுகளுக்குப் பிறகு, த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் லைகாவின் ‘தலைவர் 170’ படத்தில் எனது வழிகாட்டியான அமிதாப்பச்சனுடன் மீண்டும் பணியாற்றுகிறேன். என் இதயம் மகிழ்ச்சியில் துடிக்கிறது’ என குறிப்பிட்டுள்ளார். கடைசியாக 1991ல் ‘ஹம்’ இந்தி படத்தில் அமிதாப், ரஜினி இணைந்து நடித்திருந்தனர்.

 

The post இதயம் மகிழ்ச்சியில் துடிக்குது: அமிதாப்புடன் நடிப்பது பற்றி ரஜினி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Rajini ,Amitabh ,Chennai ,Rajinikanth ,Amitabh Bachchan ,Bhagat Fazil ,Rana Dagupathi ,Tushara Vijayan ,Ritika Singh ,Manju Warrier ,Kerala ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அரசியல் கேள்விகள் கேட்க வேண்டாம்: நடிகர் ரஜினிகாந்த் பேட்டி