×

கிச்சா சுதீப் ஜோடியாகிறார் ஸ்ரீநிதி ஷெட்டி

பெங்களூரு: இயக்குநர் சேரன், கிச்சா சுதீப் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். சுதீப்பின் 47-வது திரைப்படமான இதை, சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. கன்னடத்தில் உருவாக இருக்கும் இந்தப் படம் தமிழிலும் வெளியாகும் என்று தெரிகிறது. இந்தப் படத்தில் ‘கேஜிஎஃப்’ ஸ்ரீநிதி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். இதைப் படக்குழு அறிவித்துள்ளது. ஸ்ரீநிதி ஷெட்டி, ‘கேஜிஎஃப்’ படங்களை அடுத்து தமிழில் விக்ரமின் ‘கோப்ரா’ படத்தில் நடித்திருந்தார். இப்போது இதில் ஒப்பந்தமாகி இருக்கிறார். இயக்குநர் சேரன் இதற்கு முன் இயக்கி நடித்த ‘திருமணம்’என்ற படம் 2019ம் ஆண்டு வெளியானது. இதையடுத்து சுதீப் நடிக்கும் படத்தை அவர் இயக்குகிறார். சுதீப், கலைப்புலி தாணு தயாரிப்பில் தமிழ், கன்னடத்தில் உருவாகும் படத்திலும் நடித்து வருகிறார். இதை விஜய் கார்த்திகேயா இயக்குகிறார்.

The post கிச்சா சுதீப் ஜோடியாகிறார் ஸ்ரீநிதி ஷெட்டி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Kicha Sudeep ,Sriniti Shetty ,Bangalore ,Sareen ,Sudeep ,Satyajoti Films ,KGF ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ககன்யான்: கிரையோஜெனிக் எஞ்சின் சோதனை வெற்றி..!!