×

கல்வி, சுகாதாரத்தை பொதுப் பட்டியலிருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும்: மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் பேச்சு

சென்னை: கல்வி மற்றும் சுகாதாரத்தை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என மூத்த வழக்கறிஞரும், காங்கிரஸ் பிரமுகருமான கபில்சிபல் தெரிவித்துள்ளார். திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோவன் மகன் ராகேஷின் நினைவாக நீதி மற்றும் சமத்துவத்திற்கான அறக்கட்டளை துவக்கம் மற்றும் அவரின் திருவுருவ படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.  சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த எம்.பி. கபில் சிபில், மூத்த வழக்கறிஞர்கள், மூத்த பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர். பின்னர் பேசிய கபில்சிபல், நீட் தேர்வுக்கும் எதிர்ப்பு தெரிவித்து உரையாற்றினார். கபில்சிபல் பேசியதாவது; உதாரணத்திற்கு நீட் தேர்வை எடுத்துக் கொள்ளலாம். தமிழ்நாடு அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஆனால் நீட் தேர்வு ஒன்றிய அரசால் அமல்படுத்தப்படுகிறது. சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் நீட் தேர்வை மாநில பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்கள் எப்படி எதிர்கொள்ள முடியும்? என்று கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டில் மட்டுமல்ல நாடு முழுவதும் இதே நிலை தான். என்னை பொறுத்தவரை கல்வி பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவரப்பட  வேண்டும். அதேபோன்று சுகாதாரமும் மாநிலப் பட்டியலில் இருக்க வேண்டும். அப்போது தான் ஒரு மாநிலம் முழுமையடையும் என்றார்….

The post கல்வி, சுகாதாரத்தை பொதுப் பட்டியலிருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும்: மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Kabilsibal ,Congress ,Kapilsibal ,Dinakaraan ,
× RELATED உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள்...